தகவல் பலகை - வேளாண் சந்தை
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை எளிதாக சந்தைப்படுத்த
உதவும் வகையிலும், விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்வோரின்
வசதிக்காகவும் `நிலமும் வளமும்' பக்கத்தில் `வேளாண் சந்தை" என்ற புதிய
பகுதி இடம்பெற உள்ளது.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்து விற்பனைக்காக வைத்துள்ள விளைபொருள்கள்,
விற்பனை செய்வதற்கான பழைய வேளாண் கருவிகள் உள்ளிட்டவை பற்றிய விவரங்களை
எங்களுக்கு அனுப்பலாம். தங்களிடம் என்னென்ன விளைபொருள்கள் உள்ளன, எவ்வளவு
உள்ளது, அதன் விலை என்ன போன்ற விவரங்களை அவசியம் குறிப்பிட
வேண்டும்.அதேபோல் விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை கொள்முதல் செய்ய
விரும்புவோர் தங்களுக்கு என்னென்ன உணவுப் பொருள்கள் தேவைப்படுகின்றன,
எவ்வளவு தேவைப்படுகிறது போன்ற விவரங்களை அனுப்பலாம்.
விவசாயிகளையும், அவர்கள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களை கொள்முதல்
செய்வோருக்கும் இடையே ஒரு பாலமாக வேளாண் சந்தை பகுதி திகழும். இந்தப்
பகுதியில் தங்களது தேவை தொடர்பான தகவல்களை பதிவு செய்ய விரும்புவோர்,
தங்களிடமுள்ள விளைபொருள்கள் அல்லது தங்களுக்கு தேவையான விளைபொருள்கள் பற்றி
தெளி வான விவரங்களை, தங்களது முழுமையான முகவரி மற்றும் செல்போன் எண்ணை
குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment